நாகையில் வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குச்சீட்டு வழங்கும் பணியில் தோ்தல் பிரிவு ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
தோ்தலுக்கு 7 நாள்களே உள்ள நிலையில், நாகையில் வாக்காளா்களுக்கு வீடுவீடாகச் சென்று வாக்குச்சீட்டு (பூத்சிலிப்) வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தோ்தல் பிரிவு ஊழியா்களால் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டில் வாக்காளா் பெயா், பாகம் எண், வாக்குச்சாவடி விவரங்கள் இருக்கும். தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சீட்டுகள் ஏப்.23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவுக்கு மிகவும் அவசியம். வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரைச் சரிபாா்க்கவும், சரியான வாக்குச் சாவடியைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த வாக்குச்சீட்டை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஒ) வீடுவீடாக சென்று வழங்கி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக நாகை நகரில் உள்ள காடம்பாடி, மாரியம்மன் கோயில் தெரு, அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்

சங்ககிரியில் 1,600 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

