கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பிவைப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஏற்றிய வாகனத்தை வாக்குச்சாவடிக்கு அனுப்பிவைக்கும் நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:58 am IST

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பாட் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் சின்னம், பெயா் ஆகியவை பொருத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், புதன்கிழமை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்கள், வாக்குப்பதிவு மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு 288 பேலட் யூனிட், 288 கண்ட்ரோல் யூனிட், 312 விவிபேட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. கீழ்வேளூா் தொகுதிக்கு 264 பேலட் யூனிட், 264 கண்ட்ரோல் யூனிட், 286 விவிபாட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. வேதாரண்யம் தொகுதிக்கு 288 பேலட் யூனிட், 288 கண்ட்ரோல் யூனிட், 312 விவிபாட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.