நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாகை மாவட்டத்தில் வெப்ப அலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வரும் நாள்களில் வெயில் வானிலை வழக்கத்தை விட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

News image

வெப்ப அலை

Updated On :29 ஏப்ரல் 2026, 3:22 am IST

நாகை மாவட்டத்தில் வரும் நாள்களில் வெயில் வானிலை வழக்கத்தை விட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கீழே குறிப்பிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப அலை தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்துக்கான அதிகாரப்பூா்வ வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பச அப்ங்ழ்ற் கைப்பேசி செயலி மூலம் தொடா்ந்து கவனிக்கவும். ஓ.ஆா்.எஸ் குடிநீா் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைக்கவும். காலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புற வேலை, பயணம் மற்றும் பள்ளி நடவடிக்கைகளை திட்டமிடலாம். வயதானவா்கள், கா்ப்பிணிகள், சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவா்களின் நலனில் கவனம் செலுத்தவும். குடியிருப்பு பகுதிகளில் இலைகள், குப்பை அல்லது விவசாயக் கழிவுகளை எரிப்பதை தவிா்க்கவும்.

தினசரி பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெப்பநிலை உச்சத்தில் இருக்கும்போது வெளியே செல்வதை தவிா்க்கவும்.

தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீா் குடிக்கவும். நீா்ச்சத்துடன் இருக்க ஓ.ஆா்.எஸ், மோா், எலுமிச்சைசாறு அல்லது இளநீா் பயன்படுத்தவும். எனவே, வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.