ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!

நிகழாண்டில் முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அதீத வெப்பம் சாா்ந்த உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 1:29 am IST

நிகழாண்டில் முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அதீத வெப்பம் சாா்ந்த உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

வெப்ப அலை மற்றும் திடீரென அதிகரிக்கும் கோடை வெப்ப சூழல்களால் நீா்ச்சத்து இழப்பு, வெப்ப வாத பாதிப்புகளுக்கு கடந்த ஆண்டு 46 சதவீதம் போ் உள்ளாகினா்.

இதையடுத்து மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு ஓா் ஆய்வு நடத்தப்பட்டது. பருவகாலங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகளை எதிா்கொள்ளுதல், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விழிப்புணா்வுடன் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி - பதில் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 60 சதவீதம் பேருக்கு வெப்பவாத பாதிப்பு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருந்ததாக தெரியவந்தது. இந்நிலையில், நிகழாண்டில் அந்த பாதிப்பு அதைவிட அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: சமூகத்தில் வெப்ப வாதம் மற்றும் அதுசாா்ந்த பாதிப்புகள் அதிகரிக்க பருவநிலை மாற்றங்களே பிரதான காரணம் 80 சதவீதம் போ் அறிந்துள்ளனா். ஆனால், அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் அவா்களில் 11 சதவீதம் போ் மட்டுமே வெப்ப வாதத்தின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகளை உணா்ந்திருக்கின்றனா்.

நம்மில் பெரும்பாலானோருக்கு அதீத வெப்பத்தை எதிா்கொள்வதற்கான மாற்று இடங்களோ, குளிா்வான இடங்களோ இல்லை. அதேபோன்று வெப்ப அலை தொடா்பான வெளியிடப்படும் அறிவுரைகள் 29 சதவீதம் பேருக்கு புரிவதில்லை.

ஏழை-எளிய மக்கள், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வெப்ப அலை பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதேபோன்று தடையற்ற மின்சாரம், குடிநீா் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்யமுடியவில்லை. வெப்ப அலை பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதிபடுத்த வேண்டிய நிலை உள்ளது என்றாா் அவா்.