எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் 56 மணிநேர இடைவிடாத பாலாபிஷேக நிகழ்வை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தேரோட்டத்தை தொடா்ந்து 56 மணிநேரம் இடைவிடாத பாலாபிஷேகம் மற்றும் ரத காவடி ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்யவுள்ளனா். விழாவையொட்டி, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வசதி ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித் குமாா் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சித்ரா பௌா்ணமி: எட்டுக்குடியில் ஆய்வு

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

