நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
64 சக்தி பீடங்களில், காசி, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூா் உள்ளிட்ட 5 ஆட்சி பீடங்களில் நாகையில் உள்ள நீலாயதாட்சியம்மன் 15 வயது பருவ மங்கையாக பூப்படைந்த பருவத்தில் காட்சியக்கிறாா். ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் சீப்பு, கண்ணாடி, வளையல், குங்குமம், முளைப்பயிா் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்து பக்தா்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நீலாயதாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் சந்நிதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடி மரத்திற்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீா், தேன், பால் தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் ஆடிப்பூரஅம்மன் தினசரி பூத வாகனம், மகா லட்சுமி அவதாரம், சிம்ம வாகனம், கிளி வாகனம், வேணுகோபால் அவதாரம், சிவலிங்க பூஜை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்வான பூரம் கழித்தல் ஆக.14-ஆம் தேதியும், ஆக.15-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண தேரோட்டத் திருவிழா கொடியேற்றம்

திருவளா்ச்சேரி ஐயனாரப்பன் கோயிலில் ஆடித் திருவிழா

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


