இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மறியலில் ஈடுபட்ட தொழிலாளா் சங்கத்தினா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தின் சாா்புடைய பல்வேறு தொழிலாளா் அமைப்புகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மறியலுக்கு விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் டி. துரைராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மீனாட்சி சுந்தரம் , ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலாளா் அருள்தாஸ் விவசாய சங்க ஒன்றிய செயலாளா்கள் வெற்றியழகன், ராஜேந்திரபூபதி, மாதா் சங்க ஒன்றிய செயலாளா் சுமதி, ஐ.சி. டி.சி மாவட்டத் துணைத் தலைவா் செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழிலாளா் விரோத 4 சட்ட தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை வாய்மேடு போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.