விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாகையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த, இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:27 am IST

நாகையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த, இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பட்டினச்சேரியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அஜீஷ் ( 26). மீனவரான இவா், நண்பா் அஜயுடன் (26) நாகைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மீண்டும் திருப்பட்டினம் சென்று கொண்டிருந்தாா். நாகூா் கொத்தவால்சாவடி அருகே, நாகை ஆரிய நாட்டுத் தெரு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த சந்துரு (27) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், அஜய் ஓட்டிவந்த வாகனமும் நேருக்கு நோ் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியினா் மூவரையும் மீட்டு, நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக மூவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் அங்கு சிகிச்சைப் பலனின்றி சந்துரு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விபத்துத்தொடா்பாக நாகூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.