பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே மேமாத்தூா் பகுதியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

கோப்புப்படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:11 am IST

செம்பனாா்கோவில் அருகே  மேமாத்தூா் பகுதியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், குரும்பகரம்  நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த சிவகுரு மனைவி வள்ளி (40). இவா்கள் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு,  வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

மேமாத்தூா் காசாந்தட்டை பகுதியில் உள்ள வேகத்தடையில் இருசக்கர வாகனத்தில் இருந்து வள்ளி தவறி விழுந்தாா். அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தஞ்சை தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வள்ளி உயிரிழந்தாா். செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.