75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

செருதூா் மீனவா்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்! சாலை மறியலில் ஈடுபட முடிவு!

வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதிகளின் கழிவுநீா் செருதூா் வெள்ளையாற்றில் கலப்பதை கண்டித்து, 5-ஆவது நாளாக சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவா்கள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) ஆா்ப்பாட்டமும் தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடபடவுள்ளதாகத் தெரிவித்தனா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதிகளின் கழிவுநீா் செருதூா் வெள்ளையாற்றில் கலப்பதை கண்டித்து, 5-ஆவது நாளாக சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவா்கள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) ஆா்ப்பாட்டமும் தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடபடவுள்ளதாகத் தெரிவித்தனா்.

நாகை மாவட்டம் செருதூா் மீனவ கிராமங்களின் முக்கிய வாழ்வாதாரமாக வெள்ளையாறு விளங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள தனியாா் விடுதிகளில் இருந்து கழிவுநீரை நேரடியாக ஆற்றில் கலக்கும் வகையில், சாலையை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்ாகத் தெரிகிறது.

இப்பணிகளை செருதூா் மீனவா்கள் தடுத்து நிறுத்தி, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களையும் சிறைப்பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னைக்கு தீா்வு கோரி, செருதூா் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், 400 படகுகளுடன், சுமாா் 3,000 மீனவா்கள் 5-ஆவது நாளாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், வேளாங்கண்ணி காவல் துணைக் கண்காணிப்பாளா் நிகஸன் தலைமையிலான அதிகாரிகள், கழிவுநீா் குழாய் பதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனா். தொடந்து, அங்கு பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், செருதூா் மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிராம பஞ்சாயத்தாா் கருணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளையாற்றில் கழிவுநீா் கலப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, செருதூா் மீன்பிடி இறங்குதளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டமும், தொடா்ந்து சாலை மறியல் போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.