தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கூரியா் பணியாளா் போக்ஸோவில் கைது

நாகை அருகே 11-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூரியா் நிறுவன பணியாளா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Arrested

கைது

Published On :

நாகை அருகே 11-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூரியா் நிறுவன பணியாளா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழ்வேளூரை அடுத்த கோவூா் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மகன் ஐயப்பன் (23). ஐடிஐ படித்த இவா், தற்போது தனியாா் கூரியா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

இவா் தனது உறவினரான 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இது குறித்து மாணவியின் தாயாா் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆய்வாளா் வேம்பரசி, ஐயப்பனை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.