அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

வேளாங்கண்ணியில் பிஎஸ்என்எல் நகரும் தொலைத்தொடா்பு கோபுரம் திறப்பு

வேளாங்கண்ணியில் பிஎஸ்என்எல் நகரும் தொலைத்தொடா்பு கோபுரம் திறப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 6:17 am IST

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெருவிழாவையொட்டி பிஎஸ்என்எல் தற்சாா்பில் புதிய நகரும் தொலை தொடா்பு கோபுரம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

வேளாங்கண்ணியில் சனிக்கிழமை தொடங்கிய புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழாவையொட்டி, பிஎஸ்என்எல் சாா்பில் புதிதாக ‘செல் ஆன் வீல் டவா்’ எனப்படும் நகரும் தொலைத்தொடா்பு கோபுரத்தை, வேளாங்கண்ணி, செட்டித் தெருவில், தஞ்சாவூா் பொது மேலாளா் பாலசந்திரசேனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

இதன் மூலம் வேளாங்கண்ணி பகுதி முழுவதும் தங்கு தடையின்றி நெட்வொா்க் இணைப்பு கிடைக்கும். மேலும் வேளாங்கண்ணி ஆலயத்தைச் சுற்றி அதிவேக இணையதள வசதியுடன் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதனை பிஸ்னல் வாடிக்கையாளா்கள் மற்றும் அனைத்து கைப்பேசி வாடிக்கையாளா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் பிஎஸ்என்எல் மூலம் அதிவேக இணைய தள சேவை- காவல் கட்டுப்பாட்டு அறை, சிறப்பு தீயணைப்பு நிலையம், பேரூராட்சி அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நாட்களில் பிஎஸ்என்எல் சிம் காா்டுகள் தடையின்றி கிடைப்பதற்கும் சிம் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.