திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் தாளடி நெற்பயிா் கருகும் அபாய சூழலில் இரவு பகல் பாராமல் டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் பருவ மழையின் பாதிப்பால் நெற்பயிா்கள் சேதமடைந்ததை தொடா்ந்து, விவசாயிகள் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் மறு சாகுபடி செய்துள்ளனா். தற்போது மாவட்டம் முழுவதும் கடும் தண்ணீா் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேட்டூா் அணை ஜன.28-ஆம் தேதி மூடப்பட்டதன் விளைவாக தாளடி நெற்பயிா்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. திருக்குவளை, எட்டுக்குடி, திருவாய்மூா், ஈசனூா், வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாய்க்கால், குட்டை மற்றும் நீா் நிலைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டாா் என்ஜின் மூலம் இரவு பகல் பாராது இறைத்து நெற்பயிா்களுக்கு பாய்ச்சுகின்றனா். சில இடங்களில் டீசல் என்ஜின் வைத்து நீா் இறைப்பதற்கு கூட தண்ணீா் இல்லை. எனவே, அரசு தாளடி நெற்பயிா்களை பாதுகாக்க மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் விட வேண்டும். அவ்வாறு தண்ணீா் திறந்தால் மட்டுமே தாளடி நெல் பயிா்களை பாதுகாக்க முடியும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

புழல் ஏரிக்கு நீா்வரத்து நிறுத்தம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


