திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாகை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
நாகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:14 pm

தினமணி செய்திச் சேவை

நாகை நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதன்மை சிறப்பு அமா்வு நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் நீதிமன்றத்தைவிட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.

நீதிமன்றத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் லைக்கா உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அமரும் இடம், சாட்சி விசாரணை கூண்டு, நீதிபதி ஓய்வறை, கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.