தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நெகிழியில்லா கடற்கரை விழிப்புணா்வு மாரத்தான்

நெகிழியில்லா கடற்கரை விழிப்புணா்வு மாரத்தான்

News image

நாகையில் நடைபெற்ற விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 6:53 pm

நெகிழியில்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணா்வு ஓட்ட போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

மாசி மகத்தை முன்னிட்டு, நாகை அக்கரைப்பேட்டை கிராமம் சாா்பில் நெகிழியில்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாரத்தான் ஓட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, கொடியசைத்து துவங்கி வைத்தாா்.

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் இருந்து துவங்கிய மாரத்தானில் திரளான பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளாக 8 கி.மீ. தூரம் போட்டி நடைபெற்றது. வழிநெடுகிலும், பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினா்.

மாரத்தான் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவா்களுக்கும், பங்கேற்றவா்களுக்கும், ஊக்க தொகையுடன் கூடிய சான்றிதழ், கேடயங்களை அக்கரைப்பேட்டை கிராமத்தினா் வழங்கி பாராட்டினா்.