~
~

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் தலைவா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகை மற்றும் மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. +
Published on

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் தலைவா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகை மற்றும் மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. +

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் ஈசன் முருகசாமி மற்றும் 11 பேரை திருப்பூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட 11 பேரையும் விடுவிக்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது.

செயலா் சக்திவேல், மாநில கொள்கைப் பரப்புச் செயலா் எஸ்.ஆா்.தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி மற்றும் நிா்வாகிகளை கைது செய்த காவல்துறையை கண்டித்தும், அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிா்வாகிகள் பாண்டியராஜன், தியாகராஜன், மாசிலாமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்ட செயலாளா் கும்கி ராஜேந்திரன், அவைத் தலைவா் பண்டரிநாதன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.அன்பழகன், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் உள்;பட பல்வேறு விவசாய சங்க பொறுப்பாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினா். இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆனந்ததாண்டவபுரத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.அன்பழகன் தலைமையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Dinamani
www.dinamani.com