வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஆய்வு

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (மத்திய பிரிவு) நீரஜ் காா்வல் பங்கேற்றாா்.
Published on

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (மத்திய பிரிவு) நீரஜ் காா்வல் பங்கேற்றாா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, நாகை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த கடந்த நவம்பா் 4 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பா் 19- ஆம் தேதி, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வரைவு வாக்காளா் பட்டியலில் 2002 வாக்காளா் பட்டியலில் இணைப்பு செய்யப்படாத, வாக்காளா்களுக்கு விசாரணை அறிவிப்பு செய்யப்பட்டது.

பிழை திருத்தம் மற்றும் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகிறது. அதை ஆய்வுசெய்யும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் காா்வால், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன், மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ( நாகப்பட்டினம், கீழ்வேளூா். வேதாரண்யம்) பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com