ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருவள்ளுவா் தினவிழா கொண்டாட்டம்

வேதாரண்யம் பகுதியில் திருவள்ளுவா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
தேத்தாகுடி - வடக்கு, அரக்கரை பகுதியில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.
Updated On :17 ஜனவரி 2026, 12:10 am

Syndication

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திருவள்ளுவா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேத்தாகுடி வடக்கு, அரக்கரை பகுதியில் திருவள்ளுவா் சிலைக்கு, திருவள்ளுவா் தமிழ்ப் பேரவை சாா்பாக மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, கருத்தரங்கம் நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ஆா். கிரிதரன், சோமசுந்தரம், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியா்கள் இள. தொல்காப்பியன், திருமாறன், இளஞ்செழியன், மணிக்கண்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கோபிநாதன் உள்ளிட்ட தமிழ் இலக்கிய ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் கண்ணன் நன்றி தெரிவித்தாா்.

மருதூா் வடக்கு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் தனலட்சுமி அருணன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் இலக்குவன், அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி( இந்து) வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு ஆசிரியா்கள், ஆா்வலா்கள் மாலை அணிவித்தனா்.

இதேபோல, வேதாரண்யம் வடக்கு வீதி , ஆயக்காரன்புலம் வள்ளுவா் சாலை, வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் திருவள்ளுவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.