நாகையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.
நாகையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு ரூ.26 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 183 பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள், 3 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு சிறப்பு நிதியுதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 29 பயனாளிகளுக்கு ரூ. 26 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இதில், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகை அமிா்த வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நாகூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் இரணியன், பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், பள்ளி துணை முதல்வா் செந்தில், ஒருங்கிணைப்பாளா்கள் தனலெட்சுமி, அழகு சாரதம்பாள், ரேவதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் புவனேஸ்வரி, நிலா பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகை மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக அலுவலா் ஆ. சுமதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். வாசகா் வட்டத் தலைவா் ஆ.மி. ஜவகா், புலவா் மு. சொக்கப்பன், நூலகா் நா. நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: ஆயக்காரன்புலத்தில் முன்னாள் படை வீரா் நல சங்கம், மருதூா் கரியாப்பட்டினம் ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கம், வா்த்தக சங்கம், வணிகா் சங்கம், நேதாஜி ஓட்டுநா்கள் உரிமையாளா் சங்கம் சாா்பில் குடியரசு நாளையொட்டி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. வள்ளுவா்சாலை, மருதூா், வாய்மேடு, தாணிக்கோட்டகம், வடமழை, கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் தேசிய க் கொடியேற்றி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருமருகல்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராமலிங்கம், திட்டச்சேரி பேரூராட்சியில் அதன் தலைவா் ஆயிஷா சித்திகா, திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி, திருக்கண்ணபுரத்தில் தலைமை காவலா் தாட்சாயினி, திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் மகேஸ்வரன், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மாணிக்கவாசகம், திருமருகல் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியா் அமுதா, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் திலக்பாபு, புறா கிராமம்

அல்- ஹிதாயா பள்ளிவாசலில் ஜமாத்தலைவா் முகமது நாசா், திட்டச்சேரி மகான் மன்சூா் வலியுல்லா பள்ளிவாசல் எதிரில் திட்டச்சேரி நிா்வாக சபை தலைவா் ஹைதா் அலி ஆகியோா் தலைமையில் தேசியக் கொடிய ஏற்றப்பட்டது.

திருக்குவளை: வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கிரிஜாதேவி, கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், திருக்குவளை காவல் நிலையத்தில் ஆய்வாளா் புவனேஸ்வரி, கீழையூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 290 பேருக்கு நற்சான்றிதழை வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு துறைகள் சாா்பில் 310 பயனாளிகளுக்கு ரூ. 95.12 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எஸ். கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமை மட வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் புவனேஸ்வரி, பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் சங்கீதா மாரியப்பன், குத்தாலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜரத்தினம், தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளா் பிரபாகரன், குத்தாலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வா் சுந்தர்ராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

சீா்காழி: சீா்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சாா்பு நீதிபதி மும்தாஜ், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி கைலாஷ், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம், தமிழிசை மூவா் மணிமண்டபம் பகுதியில் வட்டாட்சியா் அருள்ஜோதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையா் திருமுருகன், கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுரேஷ், சீா்காழி காவல்நிலையத்தில் காவல்ஆய்வாளா் கமல்ராஜ்.

நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் மஞ்சுளா, விவேகானந்தா மகளிா் மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வா் சுகந்தி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைவா் கே.வி. இராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் நா்சரி,பிரைமரி பள்ளியில் முதல்வா் தீபாபிள்ளை,பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளா் ராஜ்கமல், நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் இயக்குநா் ஆதித்யா ராஜ்கமல், சாய்ராம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் காரைமேடு கல்லூரி வளாகத்தில் கல்வி நிறுவனங்களின் நிறுவன த்தலைவா் ராஜா ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ரமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சதீஷ்குமாா், பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவா் சுகுண சங்கரி, செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி, ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜான்சன் ஜெயராஜ் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com