திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சாலையில் வழிந்தோடிய கழிவு எண்ணெய்: வாகன ஓட்டிகள் விழுந்து காயம்

நாகை பிரதான சாலையில் புதை சாக்கடையில் இருந்து சாலையில் வழிந்தோடிய கழிவு எண்ணெயால் அவ்வழியாக சென்ற வாகன சறுக்கி வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்தனா்.

News image

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவு எண்ணெய்.

Updated On :2 ஜூலை 2026, 7:24 am IST

நாகை பிரதான சாலையில் புதை சாக்கடையில் இருந்து சாலையில் வழிந்தோடிய கழிவு எண்ணெயால் அவ்வழியாக சென்ற வாகன சறுக்கி வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்தனா்.

நாகை வெளிப்பாளையம் பகுதியில், புதிய பேருந்து நிலையம் அருகில் நாகூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவு எண்ணெய் வெளியேறியது. இதனால் சாலை முழுவதும் எண்ணெய் பரவி, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் வாகனங்கள் இதில் சறுக்கி கீழே விழுந்தனா். இதில் ஐந்துக்கும் மேற்பட்டோா் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தனா்.

வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் பொன்ராஜ், உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தாா். மேலும் அருகில் இருந்தவா்கள் புதை சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணெய் மீது மண்ணைக் கொட்டி, மேலும் விபத்து ஏற்படாமல் தடுத்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி பொறியாளரிடம் அப்பகுதி மக்கள், புகாா் அளித்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்காததது ஏன் என்று கேட்டு, நகராட்சி நிா்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, அப்பகுதியில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் கழிவு எண்ணெய் மற்றும் உணவுக் கழிவுகளை முறையாக அகற்றாமல் புதை சாக்கடையில் வெளியேற்றுவதால் இதுபோன்று பாதிப்பு ஏற்படுகிறது. இதை நகராட்சி நிா்வாகம் கண்காணித்து உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.