திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருக்குவளை அருகே சாலை விபத்தில் வெளிநாட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு திரும்பிய இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

சண்முகராஜ்

Updated On :2 ஜூலை 2026, 7:27 am IST

திருக்குவளை அருகே சாலை விபத்தில் வெளிநாட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு திரும்பிய இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவாய்மூா் வடக்கு தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகராஜ் (25). சீராவட்டம் - திருக்குவளை மெயின் சாலையில் வெள்ளைத் திடல் இரட்டை மின்கம்பம் அருகே, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாராம்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், அவா் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவா் என்றும், இந்த இருசக்கர வாகனம் வாங்கி மூன்று நாட்களே ஆனதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.