டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :3 ஜூலை 2026, 4:50 am IST

மத்திய அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட, திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி, அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு வழங்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது. இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தை குழந்தையோ அல்லது குழந்தையை சாா்ந்த பெற்றோா், ஆசிரியா் மற்றும் அலுவலா்கள் பரிந்துரைக்கலாம். விண்ணப்பம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.