எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புகையிலைப் பொருள்கள் கடத்திய மூவா் கைது

வேளாங்கண்ணியில் விற்பனை செய்வதற்காக, பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திவந்த மூவா் கைது

News image
Updated On :8 ஜூலை 2026, 6:38 am IST

வேளாங்கண்ணியில் விற்பனை செய்வதற்காக, பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திவந்த மூவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து, நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக, வேளாங்கண்ணி துணைக் காவல் கண்காணிப்பாளா் நிக்சனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு காரில் 39 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்ததும். அதை நாகையில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

பிடிபட்டவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சோ்ந்த நிசாருதீன் (26), சிக்கல் பனைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தமிழரசன் (31), வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (37) என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸாா், காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இக்கடத்தலில் தொடா்புடைய மேலும் 3 பேரை தேடிவருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.