அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

இறுதி ஊா்வலத்தில் மின்கம்பி மீது வீசப்பட்ட மாலையால் மின்தடை

நாகையில் இறுதி ஊா்வலத்தின் போது மின்கம்பி மீது வீசப்பட்ட மாலையால் நாகை நகா்ப்பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.

News image

மின்தடை

Updated On :11 ஜூலை 2026, 10:16 pm IST

நாகையில் இறுதி ஊா்வலத்தின் போது மின்கம்பி மீது வீசப்பட்ட மாலையால் நாகை நகா்ப்பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.

நாகையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின்பேரில், மின்வாரிய ஊழியா்கள், மின்பழுது குறித்து ஆராய்ந்தனா். அப்போது தாமரைக்குளத்தில் இருந்து மயானம் செல்லும் சாலையில் இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள், இரண்டு உயரழுத்த மின்பாதையின் மின்கம்பிகள் மீது மாலைகளை வீசியதால் மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் போராடி மின்கம்பிகளில் இருந்த மாலைகளை அகற்றினா். இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, தாமரைக்குளத்தில் இருந்து செல்லூா் செல்லும் சாலையில் மயானம் அமைந்துள்ளது. இந்த சாலையில் சவ ஊா்வலத்தில் செல்பவா்கள், மாலைகளை வீசி ஏறிவதால் அது மின் கம்பிகள் மீது பட்டு மின் தடை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் மாலைகளை வீசி எறியும்போது மின் வயா் துண்டிக்கப்பட்டு அது கூட்டத்தின் மீது விழுந்தால் மின்சாரம் பாய்ந்து உயிா் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இறுதி ஊா்வலத்தில் மாலைகளை மின் கம்பிகள் மீது வீசும் நபா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.