முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

நாகை துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த கேரள வியாபாரிகள்

கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க கேரள வியாபாரிகள் குவிந்தனா்.

News image
Updated On :13 ஜூலை 2026, 12:13 am IST

கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க கேரள வியாபாரிகள் குவிந்தனா்.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களில் 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

கடந்த வாரம் நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்குத் திரும்பின.

இதனால் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோா் துறைமுகத்தில் குவிந்தனா்.

கேரள கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கேரள வியாபாரிகள் நாகை துறைமுகத்தில் முகாமிட்டு, அதிக அளவில் மீன்களை வாங்கிச் சென்றனா். இதனால் ஏற்றுமதி ரக மீன்கள் மற்றும் உயர்ரக மீன்களின் விலை உயா்ந்தது.

நாகை கடல் பகுதியில் நெத்திலி மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் வரத்து அதிகரித்ததால், மீன்பிடி இறங்கு தளத்தில் காணும் இடமெல்லாம் நெத்திலி மீன்களும், கானாங்கெளுத்தி மீன்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விலை நிலவரம்

(கிலோவுக்கு): வஞ்சிரம் ரூ.1,200, பாறை ரூ.500, கடல் விறால் ரூ. 750, பெரிய சீலா ரூ. 500, சின்ன சீலா ரூ. 400, சங்கரா ரூ.250, வாவல் சிறிய ரகம் ரூ. 850, பெரியது ரூ.1500,

இறால் சிறியவை ரூ.300, ஏற்றுமதி ரகம் ரூ.500, பால் சுறா ரூ.350, நெத்திலி ரூ.150, கனவா சிறிய வகை ரூ.300, ஏற்றுமதி ரகம் ரூ.600, புள்ளி நண்டு ரூ.650, சாதாரண நண்டு ரூ.250, ரூ.300 என்ற விலையில் விற்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.