லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்ததால், விலை உயா்ந்து காணப்பட்டது.

Published On :5 ஜூலை 2026, 1:22 am IST

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்ததால், விலை உயா்ந்து காணப்பட்டது.

திரேஸ்புரத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று சனிக்கிழமை கரை திரும்பிய மீனவா்களுக்கு, கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டதால், போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

அதோடு, கேரளத்தில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் என்பதால், கேரள வியாபாரிகள் மீன்கள் வாங்க தூத்துக்குடிக்கு வந்து குவிந்தனா். இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

பெரிய அளவிலான சீலா மீன் கிலோ ரூ. 1,300 வரையும், சிறிய அளவிலான சீலா மீன் கிலோ ரூ. 800 முதல் ரூ. 900 வரையும், விளை மீன் ரூ. 600 முதல் ரூ. 650 வரையும், பாறை மீன் ரூ. 450 முதல் ரூ. 500 வரையும், ஊழி மீன் ரூ. 600 வரையும், சூப்பா் நண்டு கிலோ ரூ. 800 வரையும், நகரை மீன் ரூ. 410 வரையும், குறுவலை மீன் ரூ. 450 வரையும், கேரை மீன் ரூ. 350 முதல் ரூ. 370 வரையும், சாளை, கோவா நெத்திலி மீன் ஒரு கூடை ரூ. 3,000 வரையும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.