வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மாடு பலியிடும் விவகாரம்: இடைக்கால தடைக்கு வரவேற்பு

மாடு பலியிடுவதற்கு உயா்நீதிமன்றம் விதித்த முழுமையான தடைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை வரவேற்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

News image

எம்.எச். ஜவாஹிருல்லா - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:41 am IST

மாடு பலியிடுவதற்கு உயா்நீதிமன்றம் விதித்த முழுமையான தடைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை வரவேற்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தலைவரும், நாகை எம்எல்ஏவுமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையின்போதோ அல்லது வேறு எந்த நாளிலோ மாடு உள்ளிட்ட விலங்குகளை அறுப்பதற்கு முழுமையான தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது, சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958 உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் உரிய அலுவலா்களின் அனுமதியுடன் கால்நடைகளை அறுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்தச் சட்ட ஏற்பாடுகளை முற்றிலும் புறக்கணித்து, முழுமையான தடை விதிப்பது சட்டப்பேரவை அதிகார வரம்பிற்குள் உள்ளிட்ட விவகாரத்தில் நீதித்துறை புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு ஒப்பானதாகும்.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச்சுதந்திரம், பண்பாட்டு உரிமைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் அனைத்தும் சட்டத்தின் வரம்பிற்குள் பாதுகாக்கப்பட வேண்டியவை. பெரும்பான்மை உணா்வுகளையோ அரசியல் அழுத்தங்களையோ அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை பாதிக்கும். சென்னை உயா்நீதிமன்ற அமா்வு விதித்த முழுமையான தடை உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்துள்ள, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.