கீழையூா் அருகே செருதூரில் படகு என்ஜின்கள் திருட்டு வழக்கில் தூத்துக்குடியை சோ்ந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழையூா் காவல் நிலையத்தில் செருதூா் மீனவா்கள் ஜூலை 11-ஆம் தேதி தங்களது கிராமத்தில் படகு என்ஜின்கள் காணாமல் போனதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், மகிழி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில் சந்தேகத்தின்பேரில் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்துள்ளாா். இதையடுத்து காரை சோதனை செய்ததில் அதில் சுமாா் 7 லட்சம் மதிப்பில் 3 படகு என்ஜின்கள், 200 கிலா கடல் அட்டைகள், 170 கிலோ எடையுள்ள சுறா இறக்கைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து காா் மற்றும் திருட்டுப் பொருள்களை பறிமுதல் செய்து, காரை ஓட்டிய தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மீனவா் பட்டுராஜாவை (40) கைது செய்து விசாரணை செய்தனா். இதில், செருதூா் மீனவ கிராமத்தில் இருந்து படகு என்ஜின்களை திருடியது பட்டுராஜா திருடியது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






