ஈரோட்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு சோலாா் அருகே செல்லகிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (51), பழ வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (48). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். புஷ்பாவின் மீது சேட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 15 ஆம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புஷ்பாவை கடப்பாரையால் சேட்டு தாக்கினாா். படுகாயம் அடைந்த புஷ்பா ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஷ்பா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேட்டுவை கைது செய்து கோபி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







