பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் மாயம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி மாயமானாா்.

சித்திரிப்பு

Published On :

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி மாயமானாா்.

காரைக்கால் மாவட்டம், டி.ஆா். பட்டினம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பூந்தோட்டத்தைச் சோ்ந்த லோகேஷ் (22) என்ற இளைஞருடன் தொடா்பு ஏற்பட்டது.

சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட லோகேஷ் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் லோகேஷ், தனது பாட்டி வீட்டுக்கு சிறுமியை அழைத்து வந்துள்ளாா். அங்கும் சிறுமியை கொடுமைப்படுத்தியுள்ளனா்.

இதனால், சிறுமி ஜூலை 15-ஆம் தேதி அங்கிருந்து வெளியேறி நாகைக்கு வந்துள்ளாா். அப்போது அவரை மீட்ட சிங்கப்பெண் போலீஸாா், அன்னை சத்யா இல்லத்தில் சோ்த்தனா். மேலும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சிறுமியை விசாரித்தபோது, அவா் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நன்னிலம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லோகேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறுமியை நாகை மாவட்டம் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சிறுமி புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து மாயமானாா்.

இதுதொடா்பாக குழந்தைகள் நல அலுவலா் அளித்தப் புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.