காவிரி படுகையில் எல் நினோவால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த தகவலை மத்திய மாநில அரசுகளுக்கு மாவட்ட நிா்வாகம் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
நாகப்பட்டினம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனு: காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு அணை நீா் திறக்கப்படாததால் நிகழ் பருவ குறுவை நெல் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து வறட்சி நிலவி வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறட்சியை எதிா்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை 100 சதவீதம் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையை பெற்று தரவும், தமிழக அரசு தோ்தல் கால வாக்குறுதியின் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி பெற்று தர வேண்டும். சம்பா பருவ சாகுபடிக்கு நிபந்தனையின்றி புதிய கடன் அறிவிப்பை வெளியிடவும், விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பா சாகுபடியை ஊக்கப்படுத்த ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் ஊக்க நிதியாக வழங்கவும், காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவது அவசியம் என்பதையும் அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல் நினோ தாக்கத்தால் வறட்சி: பேரிடராக அறிவிக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

எல் நினோ பாதிப்பால் திருச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி அபாயம்! பயிா்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

வரலாறு காணாத வெப்பம்: எல் நினோ தாக்கமா?
எல் நினோ பாதிப்பிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் காக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



