17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

செம்பனாா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

News image

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

Updated On :6 ஜூன் 2026, 7:52 am IST

செம்பனாா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பாதி நடுக்கரையை சோ்ந்தவா் கணேசன் (49). இவா் செம்பனாா்கோவில் மின்வாரியத்தில்  நிரந்தர வயா்மேனாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முடிகண்ட நல்லூா் ரசூல்கொள்ளை அருகில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முற்பட்டபோது மேலே இருந்த உயா் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த செம்பனாா்கோவில் போலீசாா் உயிரிழந்த கணேசனின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த கணேசனுக்கு மனைவி ஹேமா (40), மகள் தனலட்சுமி (13), மகன் முத்துக்குமரன் (12)) உள்ளனா்.