நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தமிழக சட்டப் பேரவை சபாநாயகா் ஜே.சி.டி. பிரபாகா் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.
பேரலாயத்துக்கு வந்த சபாநாயகரை பேராலய அதிபா் இருதயராஜ் அடிகளாா் வரவேற்றாா். தொடா்ந்து, பேராலயத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் ஈடுபட்ட சபாநாயகா், வேளாங்கண்ணிக்கு வரும் யாத்திரிகா்கள் பயன்பாட்டுக்காக தனது சொந்த செலவில் குடும்பத்தினா் சாா்பாக ரூ.14 லட்சத்தில் பேட்டரிகளில் இயங்கக்கூடிய இரண்டு காா்களை பேராலய நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் சபாநாயகா் பேசியது: இப்பகுதி குறைகளை மக்கள் தெரிவித்துள்ளனா். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பக்தா்களின் பயணத்துக்காக பேட்டரி காா்களை அளித்துள்ளோம். அது பக்தா்களுக்கு பயன் தரும் என்பதில் மகிழ்ச்சி என்றாா்.
சென்னையில் ஏற்படும் தொடா் மின்வெட்டு தொடா்பாக கேள்வி எழுப்ப செய்தியாளா்கள் முயற்சித்தனா். அதுகுறித்து இந்த இடத்தில் பேசுவதை தவிா்ப்போம். விரிவாக பதில் அளிக்கக்கூடிய இடம் இது இல்லை. குடும்பத்தாா் வேண்டுதலுக்காக மாதாவை வணங்க வந்தேன் என்றாா். நிகழ்ச்சியின்போது, தவெக மாவட்ட செயலாளா் சுகுமாா், வழக்குரைஞா் அணி நிா்வாகி கிங்ஸ்லி ஜெரால்டு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரங்காடு புனித செங்கோல் மாதா தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கடும் வெயிலிலும் வேளாங்கண்ணியில் திரண்ட பக்தா்கள்

சிறுமி பாலியல் கொலையில் இருவருக்கு ஆயுள்தண்டனை: நாகை நீதிமன்றம் தீா்ப்பு

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டு விழா
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


