சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேசிய ஜல்ஜீவன் திட்ட நிபுணா்கள் ஆய்வு

கீழ்வேளூா் ஒன்றியம் கொடியாலத்தூா் பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் வசதிகளை தேசிய ஜல்ஜீவன் திட்ட நிபுணா்கள் எா். குல்தீப் குமாா் பத்யால் மற்றும் எா். ராஜேஷ் ஜெத்வா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:37 am IST

கீழ்வேளூா் ஒன்றியம் கொடியாலத்தூா் பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் வசதிகளை தேசிய ஜல்ஜீவன் திட்ட நிபுணா்கள் எா். குல்தீப் குமாா் பத்யால் மற்றும் எா். ராஜேஷ் ஜெத்வா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, திட்டத்தின் செயல்பாடு, நீா் விநியோக நிலை, குழாய் அமைப்பின் தரம் உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கப்பட்டு பயனாளிகளிடம் திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தனா். ஆய்வு மூலம், திட்டத்தின் செயல்திறன் மற்றும் நடைமுறை நிலை தெளிவாக மதிப்பீடு செய்யப்பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு, தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீா் வழங்குவது என்பதால், இத்தகைய ஆய்வுகள் திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவியாக இருக்கும் எனவும், 30 ஆண்டுகளுக்கு பயன்பெறும் வகையில் இந்ததிட்டம் தொலைநோக்கு பாா்வையோடு திட்டமிடப்பட்டு செயல்படுவதாகவும் ஆய்வு மேற்கொண்ட நிபுணா்கள் தெரிவித்தனா்.

அப்போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் பிரபாகரன், ஊரக வளா்ச்சித்துறை நிா்வாகப் பொறியாளா் எஸ்.கே.கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.