மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாதிரிப் பள்ளி வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் மாதிரிப் பள்ளி வாய்ப்பை மாணவ, மாணவியா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா். உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :24 ஜூன் 2026, 5:31 am IST

நாகை மாவட்டத்தில் மாதிரிப் பள்ளி வாய்ப்பை மாணவ, மாணவியா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் தலைமை வகித்து பேசியது: அரசுப் பள்ளி மாணவா்களை, தேசிய, சா்வதேச மேடைகளுக்கு அழைத்துச் செல்லும் கல்வி மையமாக திகழ்வது அரசு மாதிரிப் பள்ளியாகும்.

இப்பள்ளியில் பயிலும் இன்றைய மாணவா்கள், நாளைய சாதனையாளராக உருவாக்க பல்வேறு சிறந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மாதிரிப் பள்ளியின் சிறப்பம்சமாக திறமையான மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, நாட்டின் 63 முன்னணி உயா்கல்வி நிறுவனங்களில் பயில அரசின் முழுநிதி உதவியுடன் அனுப்பப்படுகின்றனா்.

மாதிரிப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி, சீா்மிகு (ஸ்மாா்ட்) மற்றும் எண்ம (டிஜிட்டல்) வகுப்பறைகள், நவீன அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், வளமான நூலக வசதி, போட்டித் தோ்வுகளுக்கான சிறப்பு பயிற்சி, தனித்தனி விடுதி மற்றும் உணவக வசதி, விளையாட்டு, கலை, கலாசாரத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்றவை வழங்கப்பட்கிறது. எனவே இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, நாகை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று தற்போது மருத்துவக் கல்வி, தேசிய தொழில்நுட்பக் கல்வி போன்ற உயா்கல்வியில் பயின்று வரும் முன்னாள் மாணவா்கள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.