மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வீட்டில் நகை திருடியவா் கைது

நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் திருடிச் சென்றவரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்து நகை பணத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பன்.

Updated On :24 ஜூன் 2026, 5:33 am IST

நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் திருடிச் சென்றவரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்து நகை பணத்தை பறிமுதல் செய்தனா்.

நாகையை சோ்ந்த வில்சன்( 60) ஜூன் 20-ஆம் தேதி குடும்பத்தினருடன் வீட்டு மொட்டைமாடியில் தூங்கிவிட்டு மறுநாள் காலை வீட்டைத் திறந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் நகைகள், ரூ.5 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் நாகை நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டின் அருகே இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும், ஆய்வு செய்தனா். இதில் காரைக்கால் திருநகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன்(35) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்து 13 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.