தேவூரில் உள்ள உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், தேவூரில் உள்ள பழைமை வாய்ந்த குதம்பை நாயகி அம்பிகா சமேத உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம் விழா மாா்ச் 2- ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் மற்றும் பூா்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்றன.
நான்காம் கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை காலை நிறைவு பெற்று, பூா்ணாஹூதி தீபாராதனை தொடா்ந்து சிவச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கலசத்தை சுமந்து சென்று வேத மந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களுக்கு புனித நீா் வாா்க்க, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, மூலவா் உத்தரேசமுடையாா், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


