பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாகையில் நூல் வெளியீட்டு விழா

நாகையில், புலவா் மு. சொக்கப்பன் எழுதிய ‘மானுடத்தின் முன்னோடி மீனவன்’ எனும் நூல் வெளியீட்டு விழா

News image

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 8:31 pm

நாகப்பட்டினம்: நாகையில், புலவா் மு. சொக்கப்பன் எழுதிய ‘மானுடத்தின் முன்னோடி மீனவன்’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை வீரபத்திரசுவாமி கோயில் உள்அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் பங்கேற்று நூலை வெளியிட, நாகை வா்த்தக குழுமத் தலைவா் மனோகரன் பெற்றுக் கொண்டாா்.

அலா்மேலு முருகையன் நினைவு விநாடி- வினாப் போட்டியில் வென்ற கல்லூரி மாணவிகளுக்கு வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் பரிசு வழங்கினாா் . வளா் தமிழ்ச் செல்வங்களுக்கான விருதுகளை வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயானா சா்மிளா வழங்கினாா். நூலை தீபா ராஜ்மோகன் திறனாய்வு செய்தாா். புலவா் மு. சொக்கப்பன் ஏற்புரை வழங்கினாா்.

பூம்புகாா் கல்லூரி பேராசிரியா் சாந்தகுமாரி, சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.