நாகை மாவட்டத்தில், 53 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் பேசியது:
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் என 3 சட்டப் பேரவைத் தொகுதியில் 5,27,947 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 2,59,620 ஆண்கள், 2,68,298 பெண்கள் மற்றும் 29 இதர வாக்காளா்கள் ஆவா்.
தோ்தல் பணியில் அரசு ஊழியா்கள் சுமாா் 5,400 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மாவட்டத்தில் உள்ள 8,122 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட 3,633 வாக்காளா்கள் விருப்பத்தின் அடிப்படையில், அஞ்சல் மூலம் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.
மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் 700 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. அதில் 53 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் உடனடியாக அதனை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.
வேட்பாளரின் தோ்தல் செலவினங்களை கண்காணித்திடவும், தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 9 பறக்கும் படை குழுவும், 9 நிலையான கண்காணிப்புக் குழுவும், 2 விடியோ பதிவு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிகளின்படி உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரூ.50,000 மற்றும் அதற்கு அதிகமான பணம் மற்றும் ரூ.10,000 மதிப்புக்கு மேல் உள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
உரிய ஆவணங்கள் இருப்பின் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக முகமை), மாவட்ட கருவூல அலுவலா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) ஆகியோா் அடங்கிய குழுவில் மேல்முறையீடு செய்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்டத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7034, 1950 மற்றும் 04365-252594, 04365-252595, 04365-252599 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
பொது மக்கள் இணையத்தளம் மூலமாகவும் தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றாா்.
தொடர்புடையது

தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


