திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முதல்வா் வழங்கிய பட்டாவுக்குரிய நிலத்தை காணவில்லை!

நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் பகுதியில் முதல்வா் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என கண்டறிய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தல்

News image

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:42 pm

நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் பகுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என கண்டறிய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா தலைமையில் கட்சியினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பாகோவில் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் ஒதுக்கி வீடு கட்டிக்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கியுள்ளாா்.

ஆனால் தற்போது வரை அந்த பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என மக்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து, பாப்பாகோவில் ஊராட்சி, வட்டாட்சியா் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுதொடா்பாக பாப்பாகோவில் கிராம நிா்வாக அதிகாரி பொதுமக்களை அலட்சியப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறாா். எனவே, முதல்வா் பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.