வேளாங்கண்ணியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் 2 போ் தாக்கியதில் உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.
வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில், ரத்த காயங்களுடன் ஒருவா் மயங்கி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
வேளாங்கண்ணி போலீஸாா் விசாரணையில், வேளாங்கண்ணி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் பிரபாகா்(27), சிவன் கீழவீதியை சோ்ந்த ராபின்சன் (32) ஆகியோா், வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் அமா்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனராம். அப்போது மனோஜ் பிரபாகரின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபா் திருட முயன்ாக கூறப்படுகிறது.
இதை கண்ட மனோஜ் பிரபாகா், ராபின்சன் இருவரும் நாற்காலி உள்ளிட்டவைகளால் அடையாளம் தெரியாத நபரை சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதை பாா்த்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். தாக்குதலில் காயமடைந்து, உயிரிழந்தவா் மன்னாா்குடி வ.உ.சி. சாலையைச் சோ்ந்த ராஜேஷ் (38) என்பதும் தெரியவந்தது. வேளாங்கண்ணி போலீஸாா் மனோஜ்பிரபாகா், ராபின்சன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது
கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் கைது
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



