சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சப்ர கட்டுத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 12:52 am

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சப்ர கட்டுத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருக்குவளை வட்டம் வலிவலத்தில் இதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இருதய கமலநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் எழுந்தருள, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து இந்து சமய அறநிலையத் துணை ஆணையா் ராணி மற்றும் கோயில் செயல் அலுவலா் து. காா்த்திகேயன், திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளில் தோ் வலம் வந்தது. வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா்.

அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா்.