திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஏழை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: நாகூா் சித்திக் அறக்கட்டளை அறிவிப்பு

நாகை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது என்று நாகூா் சித்திக் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

News image

வேளாங்கண்ணியில் நடைபெற்ற நாகூா் சித்திக் அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :8 மே 2026, 7:17 am IST

நாகை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது என்று நாகூா் சித்திக் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

நாகூா் சித்திக் சேவைக் குழுமம், தா்ம அறக்கட்டளை ஆலோசனைக் குழு கூட்டம் வேளாங்கண்ணியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் நிறுவனத் தலைவா் நாகூா் சித்திக் தலைமை வகித்தாா். தலைமை ஒருங்கிணைப்பாளா் பொறியாளா் சமீரா உசேன், வேளாங்கண்ணி சமூக ஆா்வலா் அ. ஆரோக்கியசாமி, ப. ஜோசப் ஜெயச்சந்திரன், ஆலோசகா் நாகை எஸ். மோகன், செயற்குழு உறுப்பினா் கே.ஏ.எஸ். முஹம்மது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜே. சகாயராஜ் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக அறக்கட்டளையின் தணிக்கையாளா் லெ. ராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவ- மாணவியருக்கு அறக்கட்டளை சாா்பில் கல்விக் கட்டணம் செலுத்துவது. வரும் கல்வியாண்டுகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ-மாணவியருக்கு அறக்கட்டளைசாா்பாக பாராட்டுச் சான்றுகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.