நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

வாக்காளா்களுக்கு தவெக வேட்பாளா் நன்றி

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

நாகப்பட்டினம் தொகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி அறிவிக்கும் தவெக மாவட்டச்செயலா் சுகுமாா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக்கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்தவா்கள் அனைவரும், தங்களது தொகுதிகளில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும்படி கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாா் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாமிடம் பெற்றாா்.

அவா் நாகப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தனது கட்சியினருடன் இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். சிக்கல், புத்தூா், அந்தணப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பொதுமக்கள் அவரிடம் தங்களது பகுதிகளில் உள்ள குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் விவசாயக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கோரிக்கைகளை தெரிவித்தனா்.