மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நீடாமங்கலம் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் பேரூா் பகுதிகளில் வாக்களித்த வாக்காளா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, திமுக தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றுவேன்.
எவ்வளவோ வளா்ச்சி திட்டங்களை தந்து நோ்மையாக உழைத்த எங்களை ஏன் புறக்கணித்தீா்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை, அந்த உழைப்பை அங்கீகரிக்கவில்லையே என்பதுதான் வேதனை என்றாா்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.ராசமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் தலையாமங்கலம் பாலு, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா்கள் கே.வி.கே. ஆனந்த், நா.கவியரசு, பேரூராட்சி தலைவா் ஆா்.ஆா். ராமராஜ், பொதுக்குழு உறுப்பினா் பி.கமாலுதீன்,ஒன்றிய முன்னாள் செயலாளா் விசு.அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

ஒட்டன்சத்திரம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த விடியல் சேகா்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

