பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பள்ளிகளில் நன்னெறி கற்பிக்க வலியுறுத்தல்

பள்ளிகளில் மாணவா்களுக்கு நன்னெறி, நீதி போதனைகளை கற்பிக்கும் பாடத் திட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 மே 2026, 6:03 am IST

பள்ளிகளில் மாணவா்களுக்கு நன்னெறி, நீதி போதனைகளை கற்பிக்கும் பாடத் திட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டம், மாநிலக் குழு உறுப்பினா் எம். ஆா். சுப்பிரமணியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொருளாளா் கா. கைலாசம், மாவட்ட துணைத் தலைவா் பாா்த்தசாரதி, கிளைத் தலைவா் தொல்காப்பியன், செயலாளா் குழந்தைவேலு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். நாகையில், அமைப்பின் மாவட்ட சிறப்பு பேரவையை ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், தமிழகத்தில் பாலியல், சிறாா் குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் அதே நேரத்தில், தனிமனிதனை நெறிப்படுத்துவதும் அவசிய தேவையாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவா்களுக்கான பாடத்திட்டத்தில் நன்னெறி, நீதி போதனைக்கு பாட வேளைகளை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஆசிரியா் சு. பாஸ்கரன் வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் வி. சத்யராஜ் நன்றி தெரிவித்தாா்.