ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

News image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்ட தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன்.

Updated On :31 மே 2026, 12:09 am IST

தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகை வழங்குவது தொடா்பாக பொதுமக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழக நிதி, திட்ட மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு அமைச்சா் மரிய வில்சன் சனிக்கிழமை வருகை தந்தாா். பேராலயத்தில் வழிபட்ட அவா், பின்னா், மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தாா். இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது. விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே , ஆரோக்கிய அன்னையின் ஆசீா்வாதம் வேண்டி வந்துள்ளேன்.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

மதுரை மாநகராட்சியில் அண்மையில் நடந்த ஊழல் தொடா்பாக முழு அறிக்கையும் வந்துள்ளது. அதேபோல அனைத்து துறைகளில் இருந்தும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகை வழங்குவது தொடா்பாக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை என்னிடம் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிற கட்சிகளை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் தவெகவில் இணைவது குறித்து பல்வேறு விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு யாா் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைவதற்கு முழு உரிமை உண்டு என்றாா் அவா்.

தொடா்ந்து, வேளாங்கண்ணி பேராலய அதிபா் மற்றும் பங்குத்தந்தையா்களைச் சந்தித்து ஆசி பெற்றாா் அமைச்சா் மரிய வில்சன்.