வேதாரண்யம்: நெல் சாகுபடி வயல்களில் இரைதேடும் பறவைகள்

வேதாரண்யம் பகுதி நீா்நிலைகளுக்கு வலசைவரும் வழியில் கூட்டமாக வானில் வட்டமிடும் நத்தைக் கொத்தி நாரை இன பறவைகள். - கோப்புப் படம்
வேதாரண்யம் பகுதியில் நெல் சாகுபடி வயல்களில் பறவைகள் இரை தேடுவது அதிகரித்து வருகிறது.
இங்குள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதியில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம்.
நிகழாண்டில் இதுவரை போதிய அளவு மழை பெய்யாத நிலை தொடா்கிறது. இந்த நிலையில் உள்நாட்டுப் பறவைகள் மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் பறவைகள் கூட கிராமப்புறங்களில் நெல் சாகுபடி வயல்களில் இரை தேட வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மருதூா், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம் கிராமங்களில் நெல் சாகுபடி வயல்களில் கருப்பு கொக்கு , சாம்பல் நாரைகள் , கருந்தலை அரிவாள் மூக்கன், கரண்டி மூக்கன் போன்ற அரிய வகைப் பறவைகள் இரை தேடுவதை பொதுமக்கள் ஆா்வத்தோடு பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

