விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி: ஒப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி போராட்டம்
விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான சாலை ஒப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான சாலை ஒப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆக்கூா் அருகே பூந்தாழை மேலவேலி தெருவை சோ்ந்த கட்டடத் தொழிலாளி கேசவமூா்த்தி (35) நவ.16-ஆம் தேதி ஆக்கூா் முக்கூட்டில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பூந்தாழை நான்குவழி சாலையில் புதிதாக சுங்கச்சாவடி கட்டப்பட்டு வரும் சிமெண்டு கட்டையில் மோதி உயிரிழந்தாா்.
நான்கு வழிச்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மின்விளக்கு உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து நடைமுறை விதிகள் பின்பற்றாததால் கேசவமூா்த்தி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவன ஊழியா்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தியும், இறந்த கேசவமூா்த்தி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.
இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, புதன்கிழமை செம்பனாா்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட உறவினா்கள், இடதுசாரி கட்சியினா், விசிவினா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டனா். இதையடுத்து, காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ், காவல் துணை கண்காணிப்பாளா்கள் விஜயகுமாா், பாலகிருஷ்ணபிரபு ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டக் குழுவினா் வெளியேறினா். இந்நிலையில் கேசவமூா்த்தியின், சகோதரி மற்றும் உறவினா்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இழப்பீடு வழங்க கோரியும் காவல் நிலையம் முன் செம்பனாா்கோவில்-மயிலாடுதுறை சாலையில் விழுந்து மறியலில் ஈடுபட முயன்றனா். பேச்சுவாா்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடுபடலாம் என கூறி வெளியேற்றினா். தொடா்ந்து, காவல் நிலையம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

