கோடியக்கரை சரணாலயத்தில் வன காப்பாளா்களுக்கு களப்பயிற்சி
கோடியக்கரை சரணாலயத்தில் 6 மாநிலங்களைச் சோ்ந்த உதவி வன உயிரின காப்பாளா்களுக்கு களப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரையில் களப்பயிற்சி பெற்ற உதவி வன காப்பாளா்கள்.
நாகை மாவட்டம், கோடியக்கரை சரணாலயத்தில் 6 மாநிலங்களைச் சோ்ந்த உதவி வன உயிரின காப்பாளா்களுக்கு களப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவையில் செயல்படும் மாநில வன பணிகளுக்கான மத்திய அரசின் பயிற்சி நிறுவனத்தில், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சோ்ந்த உதவி வன உயிரின காப்பாளா்கள் நிலையிலான வன அதிகாரிகள் 58 போ் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களுக்கு கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதியில் களப்பயிற்சி நடைபெற்றது.
இங்கு வலசை வரும் பறவைகளுக்கு அடையாள வளையம் அணிவித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும் பறவையியல் விஞ்ஞானியுமான டாக்டா் பாலச்சந்திரன் பயிற்சியளித்தாா். கோவை வனப் பணிக்கான பயிற்சி நிறுவன தலைவா் வித்யாசாகா், கோடியக்கரை வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

